×

அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையெழுத்து இயக்கம்

பழநி, ஜூன் 25: பழநியில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பழநி 31வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நகர்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமை வகித்தார். வார்டு கிளைச் செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழநி நகராட்சி 31வது வார்டில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களை புதியதாக கட்டி கொடுக்க வேண்டும். சாலைகள் முழுவதும் புதியதாக அமைக்க வேண்டும்.

விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். ஜிகா குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு இலவசமாக மீட்டர் பொருத்த வேண்டும். பாட்டாளி தெரு எஸ்எஸ் காலனியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சரிசெய்ய வேண்டும். உடைந்து போன சின்டெக்ஸ் குழாய்களுக்கு புதிய குழாய்களை போட்டு கொடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் குப்பைகளை கொட்டாமல் சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags : Marxist Communist Signature Movement ,
× RELATED கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்ட...