×

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட வாலிபர் கைது

பாலக்காடு, ஜூன் 21: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகழி அடுத்த கிழக்கேக்களத்தைச் சேர்ந்தவர் சசி (எ) பத்மானந்த்(30). இவர் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள தென்ைனமரங்களுக்கு ஊடுபயிராக தீணிப்புல் வளர்த்து வருகிறார். அதில் சில கஞ்சா செடிகளும் பயிரிட்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் அகழி டிஎஸ்பி., நவநீத்சர்மா உத்தரவின் அடிப்படையில் எஸ்.ஐ., அரிஸ்டோட்டில் தலைமையில் போலீசார் பத்மானந்த் தென்னதோப்பில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 13.5 கிலோ பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர். இது தொடர்பாக பத்மானந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags : home garden ,
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி