கோயிலை இடிக்க எதிர்ப்பு இந்து முன்னணியினர் சாலை மறியல்

பெ.நா.பாளையம்,ஜூன்21: கோவை அருகே விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள காஸ் கம்பெனி முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை விரிவாக்கம் பணி (நான்கு வழி பாதை) நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருகிறது. இந்நிலையில் பெரிய நாயக்கன்பாளையம் அடுத்துள்ள மத்தம் பாளையத்தில் வினாயகர் கோயில் உள்ளது. இதனை அகற்ற நேற்று மாலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். இதை அறிந்த இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொக்லைனை சிறைபிடித்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த, போலீசார் மற்றும் கோயில் செயல் அலுவலர் விமலா ஆகியோரிடம்  கோயிலுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

× RELATED அன்னூர் அருகே சாமி சிலை அவமதிப்பு