ராசிபுரம் எல்ஐசி அலுவலகம் பின்புறம் சாக்கடை, மழை நீரை அகற்ற ஆய்வு

ராசிபுரம், ஜூன் 19: ராசிபுரம் நாமக்கல் சாலை, ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி மற்றும் எல்ஐசி பில்டிங் பின்புறத்தில் ராஜாவாய்க்கால் உள்ளது. இதன் ஆக்கிரமிப்பால் சாக்கடை கழிவு நீர், மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கபட்டனர். இது குறித்து தினகரனில் சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது.  இந்நிலையில் நேற்று சேலம் ரயில்வே துறை பொறியாளர் (செக்ஷன் இன்ஜினியர்) காந்தி மற்றும் ராசிபுரம் நகராட்சி பொறியாளர் நடேசன், துப்புரவு ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பரமசிவம் அப்பகுதி மக்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு கேபிள்களுக்கு பாதிப்பில்லாமல் சாக்கடை நீர், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினர்.  அப்போது, பொதுமக்கள் மழை காலம் தொடங்கும் முன், கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

Tags : Rasipuram LIC ,removal ,
× RELATED பிட் காயின் மோசடி:எஸ்பி. அலுவலகத்தில் புகார்