திருச்செங்கோடு பகுதியில் சிதிலமடைந்த கிணற்றை சீரமைக்க வலியுறுத்தல்

திருச்செங்கோடு, ஜூன் 19: திருச்செங்கோடு வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெரு கீழ் வளவில் 40 அடி ஆழ ஊர் பொதுக்கிணறு உள்ளது. தற்போது இது பயன்பாடின்றி காணப்படுகிறது.மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும். இதில் குப்பை கூளங்களை போட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளது.  தரைக்கிணற்றின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் அருகே விளையாடும் குழந்தைகள் கிணற்றினுள் எட்டிப்பார்க்கின்றனர். அவர்கள் தவறி உள்ளே விழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை மூடி போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tiruchengode ,
× RELATED திருச்செங்கோட்டில் பௌர்ணமி கிரிவலம்