கார் கவிழ்ந்து விபத்து அஸ்தி கரைக்க சென்றவர் பலி

குமாரபாளையம், ஜூன் 19: நாமக்கல் பங்களா தோட்டத்தை சேர்ந்தவர் காளியண்ணன்  (65). இவரது உறவினர் சண்முகம், சேலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை இறந்தார். அவரது அடக்கத்திற்கு பிறகு இறந்தவரின் மகன் பாலசக்தி, மற்றும் நான்கு பேருடன் அஸ்தியை காவிரி கூடுதுறையில் கரைக்க காளியண்ணன் காரில் புறப்பட்டார்.  நேற்று முன்தினம் அஸ்தியுடன் குமாரபாளையம் நேரு நகர் அருகே 5 பேர் மாலை 4 மணியளவில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குழியில் கவிழ்ந்தது. இதில் 5 பேரும் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த காளியண்ணன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED கார் டயர் வெடித்து விபத்து நடிகர் காயம்