×

சிறுதுளி அமைப்பின் 16ம் ஆண்டு விழா

கோவை, ஜூன் 19:கோவை மாநகரில் சிறுதுளி அமைப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், நீர் மேலாண்மை, மரம் நடுதல், ஆகிய பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிறுதுளி அமைப்பின் 16வது பிறந்தநாளை முன்னிட்டு 17 பள்ளிகளில் 4 ஆயிரம் மாணவர்களிடம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.16ம் ஆண்டு விழாவையொட்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை கலெக்டர் ராசாமணி, நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன், போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், சிஆர்பிஎப் சதீஸ் சந்திர வர்மா, ஆர் ஏஎப் சதீஷ் குமார், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசினார். தொடர்ந்து புகைப்பட கண்காட்சி நடந்தது. பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை