×

அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

விருதுநகர், ஜூன் 18: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தேவாங்கர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே மாணவ, மாணவியரிடம் வசூலிக்க வேண்டும்.

ஆனால், பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி கடந்த வாரம் மனு அளித்தோம். மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோரே பள்ளிக்கு சென்று ஆண்கள் பள்ளி தலைமையாசிரியை சந்தித்தோம். நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த, தலைமையாசிரியரை ஆண்கள் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியையிடம் பெற்றோர் பேசியதற்கு எதுவும் எனக்கு தெரியாது. எதுவானாலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசுங்கள் என அலட்சியமாக பதில் அளிக்கிறார். இதனால் பெற்றோர் என்ன செய்து என தெரியாத நிலை உருவாகி உள்ளது. கலெக்டர் நேரடியாக தலையிட்டு அராஜக போக்குடன் செயல்படும் தேவாங்கர் ஆண்கள், பெண்கள் பள்ளி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Complainant ,private school ,
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...