×

வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விருதுநகரில் விவசாயிகள் ஆர்ப்பட்டம்

விருதுநகர், ஜூன் 18: விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தல், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ‘படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5,500 வரை வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த விவசாயிக்கான தொகையை பாகுபாடு இல்லாமல் அரசியல் தலையீடின்றி வழங்க வேண்டும். 1969ல் அறிவிக்கப்பட்ட அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றினால் 8 ஆயிரம் கண்மாய்கள், ஒரு லட்சம் கிணறுகள், ஒரு கோடி மக்களின் குடிநீர் பிரச்னை, 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்த அணைத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் தண்ணீரின் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே, விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 2015 முதல் 18 வரை விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்கள், நகை கடன்கள், பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோஷம் எழுப்பினர்.

Tags : Virudhunagar ,district ,Drought ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...