×

க.புதுப்பட்டி வாகன ஓட்டிகள் புலம்பல் மாவட்டம் பூமியை நஞ்சாக்கும் பிளாஸ்டிக்... பெரியகுளம் அருகே கல்வீச்சு தொடர்பாக மேலும் 3 பேர் கைது

பெரியகுளம், ஜூன் 18: பெரியகுளம் அருகே கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த முரளி என்பவர் சருத்துப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் டூவீலரில் வேகமாக சென்றதை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து முரளி மற்றும் அவரது மனைவி ரேவதி மற்றும் சகோதரி இந்திராணி ஆகியோரை தாக்கினர். இதனைக் கண்டித்து லட்சுமிபுரம் மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரஞ்சித்தின் அக்காள் கணவரும், தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிரஞ்சீவி டூவீலரில் ரோந்து பணியில் சென்ற போது லட்சுமிபுரத்தை சேர்ந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அவரது உறவினர்கள் தேனி- பெரியகுளம் சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசார் மீது கற்கள் வீசியும், ஆயுதங்களாலும் தாக்கினர். இதில் தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் 14 போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சருத்துப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சருத்திபட்டியைச் சேர்ந்த வெண்கலமணி, வைரமுத்து, முருகராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags : Calicut ,Periyakulam ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...