×

ஒப்பந்த ஊழியரை தாக்கியதாக மருத்துவமனை ஊழியர்கள் சிவகங்கையில் போராட்டம்

சிவகங்கை, ஜூன் 18: சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் மீது சிகிச்சைக்கு வந்தவரின் உறவினர் தாக்குதல் நடத்தியதாக ஊழியர்கள் பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் செக்யூரிட்டியாகவும், வார்டுகளில் பராமரிப்பு பணிக்காகவும், நோயாளிகளை இடம் மாற்றம் செய்யும் வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண் ஒப்பந்த ஊழியர் வித்யாதேவி என்பவர் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் நேற்று  விபத்தில் சிக்கிய கோவானூர் கிராமத்தை சேர்ந்த தனசேகர் என்பவரை, கீழ் தளத்தில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சக்கர நாற்காலியில் அழைத்து சென்றுள்ளார்.

ஸ்கேன் எடுக்க நேரமாகும் என்பதால் தனசேகரை அவரது மனைவி செல்லத்திடம் விட்டு விட்டு மீண்டும் தன்னுடைய தளத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். இதையடுத்து தாமதமாக வந்ததாக கூறி வித்யாதேவியை தனசேகரன் மற்றும் அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பணி பாதுகாப்பு கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் டீன் சந்திரிகாவிடம் மனு அளித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Hospital workers ,contract worker ,Sivaganga ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...