×

போலீசில் பொதுமக்கள் புகார் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

திருமயம்,ஜூன்18: திருமயம் அருகே நடைபெற்ற பஞ்ச மூர்த்திகள் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டி கானப்பேட்டை பிரம வித்தியாம்பாள் சமேத பூமிஸ்வரர் பஞ்சமூர்த்திகள் வைகாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியதோடு தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் ஒவ்வொரு நாள் இரவும் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பஞ்சமூர்த்திகளை தனித் தனி தேர்களில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். குறிப்பாக சிவன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த நிலையில் அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்து சென்று வழிபட்டனர்.இதனை தொடர்ந்து நடைபெற்றமஞ்சள் நீராட்டு விழாவுடன் வைகாசி திருவிழா நிறைவு பெற்றது. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ