×

திருமயம் அருகே பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா கொல்கத்தாவில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜூன் 18: கொல்கத்தாவில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று புதுக்கோட்டையில் தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கம் கொல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரியில் 85 வயதுள்ள முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்நிலையில் சிகிச்சை அளித்த டாக்டர் முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் இறந்துவிட்டார் என கூறி இந்த முதியவரின் உறவினர்கள் மருத்துவர் பரிபா முகர்ஜியை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த முதியவர் பரிபா முகர்ஜி சிகிசசை பெற்று வருகிறார். இந்த செயலை கண்டித்தும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. மேலும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சலீம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் டாக்டர்கள் நவரத்தினசாமி, முத்துராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Doctors ,government hospital ,attack ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...