×

கல்குவாரிகளை ஏலம் விடக்கோரி கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர், ஜூன் 18: பெரம்பலூர் மாவட்டத்தில் ஏலம் விடப்படாத கல் குவாரிகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்குவாரி ,கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் ஏலம் விடப்படாத கல் குவாரிகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்குவாரி ,கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள தெரணி, பாடாலூர், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள எசனை, வெங்கலம் பெரம்பலூர் தாலுகாவில் உள்ள தண்ணீர் பந்தல் துறைமங்கலம், செங்குணம், கல்பாடி, எறையூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் ஏலம் விடப்படாமல் உள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளான சோலிங் கற்கள் முழு அளவில் கிடைக்காததால் கிரஷர் முழுமையாக இயக்கப்பட முடியாத நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்களும், உரிமையாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஏலம் விடப்படாமல் உள்ள கல் குவாரிகள் அனைத்தையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்குவாரிகள், கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Crusher Crusher Owners Association ,Perambalur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...