×

கோவில்பட்டியில் விஸ்வநாத தாஸ் பிறந்த நாள் விழா

கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில்  மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட  வீரர் விஸ்வநாத தாசின் 134வது பிறந்த நாள் விழா நடந்தது. கோவில்பட்டி  வ.உ.சி. நகரில்  இந்து மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்க  கட்டிடத்தில் நடந்த இவ்விழாவிற்கு தலைமை வகித்த மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், தியாகி விஸ்வநாத தாஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். வட்டாரத் தலைவர் குருசாமி,  செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன்  முன்னிலை  வகித்தனர்.

துணைத்தலைவர் காளிராஜ், சங்க ஆலோசகர் அய்யனு, மாவட்ட அனைத்து  மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் கருப்பசாமி, கமிட்டி  உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த நாளை ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி அரசு சார்பில் கொண்டாட வேண்டும். அரசு செவிலியர் ஒதுக்கீட்டில் மருத்துவ சங்க  மகளிருக்கு 5 சதவீதம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : birthday celebration ,Viswanatha Das ,Kovilpatti ,
× RELATED கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்