×

ஆந்திரா நாவல்பழம் கிலோ 200 ரூபாய் தேனியில் விற்பனை ஜோர்

தேனி, ஜூன் 14:  தேனி மாவட்டத்தில் நாவல்பழ சீசன் ஆடி 18 ம் தேதிக்கு மேல் தொடங்கும். வருசநாடு, மயிலாடும்பாறை, போடி, கம்பம் பகுதிகளில் இருந்து நாவல் பழம் வரும். இந்த பழம் மிகவும் சிறியதாக இருக்கும். சதைப்பற்று இல்லாவிட்டாலும் நாட்டு ரகத்தை சேர்ந்தவை என்பதால் சுவையாக இருக்கும்.

தற்போது வீரிய ரக நாவல் பழம் ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருந்து வருகிறது. தேனி மார்க்கெட்டில் ஒரு கிலோ பழம் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பழம் விற்பனை செய்யும் அழகர்சாமி கூறியதாவது: நான் பல ஆண்டுகளாக நாவல் பழம் விற்பனை செய்கிறேன். தேனி மாவட்டத்தில் விளையும் பழம் கிலோ 100க்கும் குறைவாகவே விற்கப்படும்.

சத்தும் அதிகமாக இருக்கும். ஆந்திரா பழம் சுவையும், சதைப்பற்றும் கொண்டதாக இருக்கும். இதனால் இதற்கென தனி ரசிகர்கள் உள்ளனர். பேக்கிங் செய்து பக்குவமாக இவ்வளவு தூரம் கொண்டு வந்து விற்பதால் விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் பலரும் விரும்பி வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Andro Nawalpam Kanni ,
× RELATED தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு