×

முகக்கவச ஏர் பியூரிபையர்(விலை சுமார் ரூ.1,600)

எல்ஜி நிறுவனம் முகக்கவச வடிவமைப்பில் புதிய ஏர் பியூரிபையரை அறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி டைப் சி கேபிள் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இதில், 820 எம்ஏஎச் லித்தியம் அயர்ன் பேட்டரி உள்ளது. இரண்டு மின்விசிறிகள் மற்றும் சென்சார்கள் உள்ளன. மின்விசிறியை மூன்று வேக கட்டுப்பாடுகளில் வைத்துக்கொள்ள முடியும். 99.95 சதவீதம் நுண் துகள்களை வடிகட்டக்கூடிய எச்இபிஏ பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அதோடு 97.3 சதவீதம் வைரஸ்களையும் 93.5 சதவீத பேக்டீரியாக்களையும் அறையில் இருந்து வெளியேற்றும் திறன் கொண்டது. கத்தாரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹1,600. …

The post முகக்கவச ஏர் பியூரிபையர்(விலை சுமார் ரூ.1,600) appeared first on Dinakaran.

Tags : LG ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு