×

மஞ்சூர் அருகே மனுநீதி நாள் முகாம்: ரூ.2.73 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மஞ்சூர், ஜூன்.14: மஞ்சூர் அருகே குந்தா ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 62 பயணாளிகளுக்கு ரூ.2.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.  மஞ்சூர் அருகே உள்ள குந்தா ஊராட்சி மேல்குந்தா கிராமத்தில் மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் மனுநீதி நாள் முகாம்  நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமைதிட்ட அலுவலர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். குந்தா தாசில்தார் சரவணன் வரவேற்றார். இதில் முதியோர், முதிர்கன்னி உதவிதொகை, ஈமச்சடங்கு உதவிதொகை, மாற்றுத்திறணாளிகளுக்கு சர்க்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், பஞ்சகாவ்யம் இயற்கை உரம், மரக்கன்றுகள் என 62 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2லட்சத்து 73ஆயிரத்து 900மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ‘மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்கு குறைந்த வட்டியுடன் கடன் உதவி வழங்கும் வங்கிகளை அணுகவேண்டும். மாறாக தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டி செலுத்தி அவதிபடக்கூடாது. மேலும் பொதுமக்கள் தங்களது கிராமங்களில் அடிப்படை வசதிகளான சாலைவசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்டவைகள் குறித்த புகார்களை 9943126000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியப்படுத்தலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவைத்து அவர்களை உயர்ந்த நிலையை அடையச்செய்வது பெற்றோரின் கடமையாகும் என்றார். முகாமில் பொதுமக்கள் தரப்பில் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது, இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


Tags : Mannuth Day ,camp ,Manchur ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு