மாவட்ட மேலாளர் தகவல் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்

அரியலூர், ஜூன் 14:தென்மேற்கு பருவ காற்று காலத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில்மின் விபத்து, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.    தற்போது காற்று காலமாக இருப்பதால் மின்கம்பிகள் தொய்வாக இருந்தாலோ, மின்பாதையில் மரக்கிளைகள் உரசுவதுபோல் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்பாதையின் மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் தொடாமலும், அருகில் செல்லாமலும் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அருகில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும்போது அருகில் மின்பாதை கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதன் அருகில் செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்


Tags : district manager ,accidents ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்