கோடியக்கரை வன பகுதியில் கடல்நீர் புகுந்ததால் சரணாலயம் பாதிப்பு மூலிகைகள் அழியும் அபாயம்

வேதாரண்யம், ஜூன் 14: கோடியக்கரை வனப்பகுதியில் கடல்நீர் புகுந்ததால் சரணாலத்தில் பாதிப்பு ஏற்பட்டு மூலிகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடல்காற்று பலமாக வீசுவதால் உப்பள பகுதி மற்றும் காட்டு பகுதியில் கடல் நீர் புகுந்து ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் கடல்நீர் சூழ்ந்துள்ளது. இந்த காடுகள் 27 சதுர கி.மீ பரப்பளவில் பசுமைமாறா காடுகளாக உள்ளது. இங்கு மான், குதிரை, முயல், நரி, குரங்கு போன்ற வனவிலங்குகளும், பறவைகளும் அதிகம் உள்ளன. கோடியக்கரையில் நின்றுதான் ராமர் இலங்கையை பார்த்ததாக வரலாறு கூறுகிறது. அவர் நின்று பார்த்த இடத்தை ராமர் பாதம் என்று அழைக்கின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசிவருவதால் உப்பள பகுதியிலிருந்து தண்ணீர் உப்பளத்திற்கு அருகே உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் செல்கிறது. இதனால் காடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கஜா புயலினால் கலையிழந்த வனவிலங்கு சரணாலயம் தற்போது துளிர்விட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பலத்த சூறைகாற்றினால் கடல்நீர் உப்பளம் வழியாக வனச்சரகத்துக்கும், வனப்பகுதிக்குள்ளும், சேர்வராயர் கோயில் பகுதியிலிருந்து கடல்நீர் உட்புகுந்து வருகிறது.இதனால் வனபகுதியில் உள்ள மரங்களும் மூலிகை களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: