×

பஸ் பாஸ் கேட்டு திரண்ட மாணவர்கள்

நாமக்கல், ஜூன் 14: நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திரண்ட மாணவர்கள், பஸ் பாஸ் கேட்டு மனு அளித்தனர்.     
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேற்று மாணவர்கள் திரண்டு சென்றனர். பின்னர், இந்திய மாணவர் சங்கம் சார்பில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். மாணவ, மாணவிகளின் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கோபால், தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினர் கோபி உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : rally students ,
× RELATED காடுகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி