×

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐடிஐகளில் சேர 15ம்தேதி வரை அவகாசம்

நாமக்கல், ஜூன் 13: நாமக்கல், கொல்லிமலை அரசு ஐடிஐகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் கீரம்பூர் அரசு ஐடிஐ பயிற்சி அலுவலர் அமானுல்லா பாஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐகளுக்கும், தனியார் ஐடிஐகளில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கை பெறுவதற்கு, வரும் 15ம்தேதி கடைசி நாளாகும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு பட்டம், பட்டயம் பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு படிப்பாக எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கும், ஓராண்டு படிப்பாக மெக்கானிக், ஆட்டோபாடி ரிப்பேர் ஆகிய தொழிற்பிரிவுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் டிடிபி ஆப்ரேட்டர் போன்ற தொழிற்பிரிவுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சேர்க்கை பெறும் மாணவ, மாணவியருக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுவதுடன், மத்திய அரசால் தொழிற்தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற்சான்றிதழும் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீரம்பூரில் உள்ள, நாமக்கல் அரசு ஐடிஐக்கு, உரிய சான்றிதழுடன் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,Government ,Kollamalai ,ITIs ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...