×

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஈரோடு எம்பி

பள்ளிபாளையம், ஜூன் 13:  நாடாளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி, கடந்த 2 நாட்களாக பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
ஓடப்பள்ளியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கணேசமூர்த்தி, பொதுமக்கள் சாலை வசதி, சாக்கடை வசதி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை கோரி வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கலெக்டரிடம் நேரில் மனுக்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற எம்பி., அங்குள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவருடன் திமுக ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி,  மாவட்ட பொருளாளர் குமார், நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி  நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், வினோத், இளங்கோ மற்றும் திமுக.,  மதிமுக., கம்யூனிஸ்ட்., கொமுதேக., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடன்  சென்றனர்.

Tags : voters ,Pallipalayam Union ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதியில் 24 சுற்று வாரியாக வாக்குகள் விபரம் அறிவிப்பு