×

இடப்பிரச்னையில் இருதரப்பினர் மோதல்

ஜெயங்கொண்டம், ஜூன் 13: ஆண்டிமடம் அருகே இடபிரச்னை தகராறில் இருதரப்பினர் மோதி கொண்டனர். இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியை சேர்ந்தவர் கவுதம் (19). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் ராமச்சந்திரனுக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் கவுதம் தரப்பில் கவுதம், அவரது தந்தை ராமச்சந்திரன் (48), பிரபாகரன் (16), மற்றொரு தரப்பில் தர், சதீஷ்குமார் ஆகியோர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இருதரப்பிலும் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கவுதம் கொடுத்த புகாரின்பேரில் தர், சதீஷ்குமார் மீதும் தர் கொடுத்த புகாரின்பேரில் ராமச்சந்திரன், கவுதம், பிரபாகர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்தகராறில் பெண் காயம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நாகம்பந்தல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாலகுரு என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் அசோக், அவரது மனைவி சசிகலா (20) ஆகியோர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர்.   அப்போது அங்கு வந்த பாலகுரு (24), செல்வகணபதி, கனகாயாள், செல்வி ஆகியோர் அசோக், சசிகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சசிகலா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சசிகலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் மாயம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா விளத்தூரை சேர்ந்தவர் சேரன். இவரது மகன் அப்பு (எ) ராகுல் (17). ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாமாண்டு படித்து வந்தார்.
 இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணி என்கிற பெண்ணை காதலித்து வந்தார். மணியின் பெற்றோர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆண்டிமடம் சூரக்குழி கிராமத்தில் உள்ள உறவினர் சரவணன் என்பவரது வீட்டில் ராகுல் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் ராகுலை காணவில்லையென ஆண்டிமடம் போலீசில் சரவணன் மனைவி விமலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.5 பேர் மீது வழக்குசாலையில் செல்லும் பஸ், கார், ஆட்டோ மற்றும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுகிறது.


Tags : conflict ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு