×

ஒரேநாளில் 7 இடங்களில் தீத்தடுப்பு ஒத்திகை

மதுரை, ஜூன் 12: மதுரை நகர், தல்லாகுளம் மற்றும் அனுப்பானடி தீயணைப்பு நிலையங்கள் சார்பில் நேற்று ஒரே நாளில் அரசு மருத்துவமனை, அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோச்சடையில் தனியார் கம்பெனி, அனுப்பானடியில் தனியார் பள்ளி, திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பாடி ஆகிய 7 இடங்களில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

தென் மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அலுவலர் கல்யாணக்குமார், உதவி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன், பாண்டி, நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், திருமுருகன், உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதனால் தீ ஏற்படுகிறது? எத்தனை வகையான தீ உள்ளது? மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை உடனடியாக செயல்பட்டு எப்படி அப்புறப்படுத்த வேண்டும்? அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்தால் இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும்? யானை உள்ளிட்ட விலங்குகள் இறந்தால் அவற்றை எப்படி ஹைட்ராலிக் லிப்டர் மூலம் தூக்கிச்சென்று அப்புறப்படுத்த வேண்டும். தனிநபர் மீது தீ பற்றினால் அவரை எப்படி காப்பாற்ற வேண்டும்? கேஸ் மற்றும் எலக்ட்ரிக் தீ ஏற்பட்டால் தடுப்பது எப்படி? என பொதுமக்கள், ஊழியர்களுக்கு கற்று தரப்பட்டது.

Tags : places ,
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி