×

மனைவிக்கு தெரியாமல் சீரமைக்கப்படாத பட்டணம் தடுப்பணை

கோவை, ஜூன் 12:  கோவை நொய்யல் ஆற்றின் நீர் ஆதாரத்தில் 2 தடுப்பணை உள்ளது. ஒண்டிப்புதூர் அடுத்த பட்டணம் பகுதியில் நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணை கடந்த 50 ஆண்டாக சீரமைக்கப்படவில்லை. ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், பட்டணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் இந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது. தடுப்பணை முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து காணப்படுகிறது. இந்த தடுப்பணையை சீரமைக்க பட்டணம் பகுதி மக்கள் பல முறை பொதுப்பணித்துறை நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் கூறுகையில், ‘‘ நொய்யல் ஆறு பட்டணம் பகுதியில் அடைபட்டு கிடக்கிறது. கனமழை பெய்தாலும் ஒண்டிப்புதூர் தாண்டி மழை நீர் ஆற்றில் வருவதில்லை. உள்ளூரில் உள்ள சாக்கடை நீர் தான் நொய்யலில் பாய்கிறது. கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சாமளாபுரம் குளமும் சாக்கடை நீர் தான் அதிகளவு தேங்கி நிற்கிறது. பட்டணம் தடுப்பணையும், அதை சுற்றியுள்ள குளங்களையும், வாய்க்கால்களையும் சீரமைக்கவேண்டும், ’’ என்றனர்.

Tags : town ,spouse ,
× RELATED புதுகும்மிடிப்பூண்டியில் சோகம்...