×

கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் காவிரி, அமராவதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கரூர் கலெக்டரிடம் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செந்தில் பாலாஜி கோரிக்கை

கரூர், ஜூன் 12: காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டி வலியுறுத்தி எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செந்தில்பாலாஜி நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டம் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற்று மணல் எடுத்து உள்ளுர் தேவைகளுக்கு கொண்டு சென்று வந்தனர். கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியில் உயர் நிலையில் உள்ள சிலர் சொந்த குவாரிகள் போல நினைத்துக் கொண்டு, ஓட்டச் சொல்வதும் பின்னர் நிறுத்தச் சொல்வதும் என்ற போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில அதிகாரிகளும் துணை போகின்றனர்.

மாட்டு வண்டி உரிமையாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் எம்பி உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ளது போல கரூர் மாவட்டத்திலும் முறையான அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை வரை பார்ப்போம். முடியாத பட்சத்தில் திங்கள் கிழமை அன்று மதுரை நீதிமன்றத்தில் மனு அளித்து 5 ஆயிரம் மாட்டு வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வோம். ஆறுகளில் பொக்லைன் மூலம் மணல் எடுத்து லாரிகளில் கொண்டு செல்லப்படுவது குறித்தும் கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து எம்பி ஜோதிமணி கூறுகையில்,
பாராளுமன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது, ஆறுகளில் இருந்து மணல் ஏற்றிச் செல்லப்படுவது குறித்து பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்தனர். சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கரூர் வரும் போது, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளுர் தேவைகளுக்கு மணல் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆளுங்கட்சியினர் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். இது குறித்து கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நியாயம் கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் முறையாக மணல் அள்ள அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது திமுக நெசவாளர் அணி மாநில தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். சமூக ஊடக விமர்சனங்களை கண்காணிக்க ரயில்வே துறை முடிவு ரயில்வேதுறை சமூகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், யு டியூப் போன்ற சமூக ஊடக ங்களில் விமர்சனங்கள், கோரிக்கைகள், புகார்கள், பாராட்டுகள், சம்பவங்கள், வீடியோக்கள் என பலவிமாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுகிறார் கள். பிரச்சனைகளில் தங்கள் தரப்பு நியாயத்தையோ, இயலாமைக்கான சூழல்களையோ அல்லது காரணங்களையோ ரயில்வே தெளிவு படுத்தும் வழக்கம் இல்லை. இந்த போக்கை மாற்ற ரயில்வே வாரியம் தற்போது முடிவு செய்து உள்ளது. இதற்காக ரயில்வேயின் பொதுத் தொடர்பு துறை விதிகள்- 2007 ல் தற்போது திருத்தம் மேற் கொண்டு இருக்கிறது.

ரயில்வே வாரிய சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு நிர்வாக இயக்குனர் உமேஷ் பலோன்டா, கடந்த ஜூன் 6ம் தேதி இதற்கான உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில் சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கண்காணிக்க அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அனுபவம் உள்ள தனி யார் ஏஜென்சிகளை நியமிக்க வேண்டும். ரயில்வே மண்டல பொதுத் தொடர்பு தலைமை அதிகாரி இதற்கான கண்காணிப் பாராக செயல்பட வேண்டும். சமூக ஊடக பதிவுகள் சேமித்து வைப்பதோடு உடனுக்குடன் பரிசீலத்து தகுந்த பதில் அளிக்க வேண்டும். செல்போன் செயலி உருவாக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஊடகங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்துமா? பயணிகளுக்கு இதனால் பலன் கிடைக்குமா ? மேலும் ஊடகங் களில் உலா வரும் போலியான தகவல்கள் கண்டறிய சைபர் கிரைம் உதவியுடன் இத்திட்டம் செயல் படுத்தப்படுமா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில்,அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் சமூக ஊடகங்களுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே இடைவெளி இருந்து வருகிறது. பெரிய அளவில் விமர்சனங்கள் வரும் போது ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான சமூக ஊடக விமர்சனங்கள் ரயில்வேயின் தோற்றத்தை சிதைப்பதாக இருக்கிறது.

குறைபாடுகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ள இத்திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் பயணிகளின் கோரிக்கைகள் ஒருங்கிணைத்து அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். சமூக ஊடகபதிவுகள் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கமோ, திட்ட மோ ரயில்வே வசம் இல்லை. இத்திட்டம் பொது மக்கள் வரவேற்பை பெறும் என கூறினார். ரயில்வே உபயோகிப்பாளர்கள் நலச் சங்க தலைவர் ஹரேஷ் கூறுகையில், பயணிகளின் முறையான தேவைகள், ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட ரயில் வே அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கடிதங்கள் மூலம் தெரியப் படுத்தி இருக்கி றோம். நேரில் சென்று மனுக்களாகவும் தருகிறோம்.

அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது நேரில் பார்த்து கோரிக்கைகள் முன் வைக்கிறோம். பாரளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ரயில்வே அமைச்சக கவனத்திற்கு கூட கொண்டு செல்கிறோம். அதற்கு பெரிய அளவில் பலன் எதுவும் கிடைப்பது இல்லை. திருவாரூ ரில் இருந்து திருச்சிக்கு காலை 5 அல்லது 6 மணிக்கு ஒரு பயணிகள் ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. சமூக ஊடகங்களின் பதிவுகளுக்கு பதில் கிடைக்கலாம். பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றார்.

பயணிகளுக்கு பலன் தருமா?
பயணிகளின் கோரிக்கைகள் ஒருங்கிணைத்து அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். சமூக ஊடகபதிவுகள் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கமோ, திட்டமோ ரயில்வே வசம் இல்லை. இத்திட்டம் பொது மக்கள் வரவேற்பை பெறும். ரயில்வே மண்டல பொதுத் தொடர்பு தலைமை அதிகாரி இதற்கான கண்காணிப் பாராக செயல்பட வேண்டும். சமூக ஊடக பதிவுகள் சேமித்து வைப்பதோடு உடனுக்குடன் பரிசீலத்து தகுந்த பதில் அளிக்க வேண்டும்.

Tags : Jyothimani ,MLA ,Senthil Balaji ,Karoor Collector ,
× RELATED மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை...