×

வாகன ஓட்டிகள் திணறல் புதுக்கோட்டை தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 147 மனுக்கள் பெறப்பட்டன

புதுக்கோட்டை, ஜூன் 12: கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வருவாய் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1428ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக புதுக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கவிநாடு மேலவட்டம், கவிநாடு கீழவட்டம், வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டுர், புதுக்கோட்டை வடக்கு மற்றும் புதுக்கோட்டை தெற்கு, முள்ளூர், திருக்கோகர்ணம் ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்களிடம் இருந்து பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 147 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தாசில்தார்கள் பரணி, திருமலை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் அய்யன் ஊரணியில் உள்ள நீரை 12 ஆண்டுகளுக்கு முன்னர் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக குடிநீருக்காக ஊரணியில் நீர் எடுப்பதை தவிர்த்த அப்பகுதி மக்கள் மூதாதையர்கள் பயன்படுத்திய ஊரணியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்

Tags : motorists ,Pudukottai Taluk ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...