×

கலெக்டர் அழைப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 12: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1ம் வகுப்பு முதல் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 2019-20ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை அனுக வேண்டும். மேலும் 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், முந்தைய வகுப்பில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் (மதிப்பெண் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்) மற்றும் மார்பளவு புகைப்படம் 1 ஆகியவற்றுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் என்ற முகவரிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : district ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்