×

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் 294 மனுக்களுக்கு உடனடி தீர்வுதிருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் 294 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருப்போரூர், ஜூன் 12: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் பெறப்பட்ட 294 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நேற்று  இறுதி நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்போரூர், கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், கரும்பாக்கம், மாம்பாக்கம், மானாம்பதி, பையனூர் உள்ளிட்ட குறுவட்டங்களில் அடங்கிய 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ராஜு  தலைமையில், முறையாக மனுக்கள்  பெறப்பட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம்  உரிய நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டன. பொது மக்களிடம் இருந்து மொத்தம் 859 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 473 மனுக்களுக்கு தீர்வு செய்யப்பட்டது. 386 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. 179 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதிநாள் நிகழ்வான நேற்று உடனடி தீர்வாக இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சிறு விவசாய சான்று ஆகியவற்றை 294 பயனாளிகளுக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ராஜு,   திருப்போரூர் வட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினர். இதில், துணை வட்டாட்சியர் தர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : petitions ,office ,Vyapatheri Vattatheerar ,Vattatheerar ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் குறைவான மனுக்கள்