×

கலெக்டர் அழைப்பு தஞ்சை, திருவாரூர், நாகைஆகிய டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி,ஜூன்11: தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான நெல் திருவிழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசியஅளவிலான நெல் திருவிழாவில் நிறைவேற்றியதீர்மானங்கள்: தமிழகத்து விவசாயிகள்மத்தியில் புழக்கத்தில் இருந்து மறைந்து போனஅரியவகைபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மறைந்த நெல் ஜெயராமனின் அளப்பரியபங்களிப்பை கௌரவிக்கும் வண்ணம், அவரைப்பற்றியதகவல்களை வரும்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு 12 ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் சேர்த்த தமிழக அரசுக்கும், தமிழககல்வித்துறைக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தும்.

திருவாரூர் மாவட்டத்தில் அல்லது டெல்டா மாவட்டங்களில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து அதனைஇயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடிக்கான ஒரு மாதிரிப் பண்ணையாகஅமைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். சோழ நாடு சோறுடைத்து என்பதற்கும், தமிழர் நாகரிகத்தின் அடையாளமாகவும், தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமாகவும் விளங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள்இழந்த பெருமையை மீண்டும் பெறும் வண்ணம் இந்த 3 மாவட்டங்களையும் வேளாண் சிறப்பு பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவித்து, அப்பகுதியில் மக்கள் விரும்பாத, வேளாண் அல்லாதஎந்த ஒரு செயல்பாடுகளுக்கும் விளை நிலங்கள் கையகப்படுத்துவதைசட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி சிறப்பு அரசாணை மூலம் அரசு தடை செய்ய வேண்டும் எனதீர்மானிக்கப்படுகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களில் பெரும்பாலான ரகங்கள்ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், மருத்துவப் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் குறைந்த அளவு கிளைசமிக் எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளதை இந்திய உணவுப் பயிர் பதனீட்டு கழக விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இது அதிகரித்துவரும் சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவற்றை கட்டுக்குள் வைப்பதற்கு மிகசிறந்தஉணவாக கருதப்படுகிறது. எனவே, இதுகுறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆராய்ச்சிமாணவர்களை தொடர் ஆராய்ச்சிகளில் அதிக அளவில் ஈடுபடுத்த அரசு உரியநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையில் மரபணு மாற்றுவிதைகள்விற்கப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அரசு அதிகரிக்க வேண்டும், விவசாயிகளுக்கு வருமான உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள்நடைமுறைப்படுத்த வேண்டும், எனதீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Tags : Collector ,Tanjore ,districts ,Nagai ,Tiruvarur ,Delta ,specialty zones ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...