×

விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

பெரம்பலூர், ஜூன்11: பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிகட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மார்ச் 31 ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறுவதற்காக கிராமத்தில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் பொதுமக்கள் புறப்பட்டனர். இதனை அறிந்த போலீசார் அரசலூர் கைகாட்டியில் அவர்களை வழிமறித்து காளைகளை இங்கேயே விட்டுவிட்டு பொதுமக்கள் மட்டும் சென்று மனு கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து ஜல்லிக்கட்டு காளைகளை அங்கேயே விட்டுவிட்டு பொதுமக்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டர் சாந்தாவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஊருக்கு சென்றனர்.

Tags : Jallikattu ,village ,Visuvakudi ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...