×

சிறுவர்கள் ஆனந்த குளியல் நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம் 218 மனுக்கள் குவிந்தன

நாகை, ஜூன் 11: நாகையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் 218 மனுக்கள் குவிந்தன. நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. வங்கி கடன், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன் வைத்து நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் 10 மனுக்களும், ரேசன்கார்டு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 208 என்று மொத்தம் 218 மனுக்கள் வந்தது.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 17 நபர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இலவச பஸ் பாஸ், 2 நபர்களுக்கு தலா ரூ.16 ஆயிரத்து 740 மதிப்பிலான நடை உபகரணங்கள் என ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தாட்கோ சார்பில் 3 நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 529 மதிப்பில் வங்கி கடனுதவி, 4 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டது. டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,Anantha ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...