×

கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஆதி திராவிடர் நலத்துறையின்(எஸ்.சி, எஸ்.டி) கீழ் கல்லூரி மாணவர்களுக்கென 3 விடுதிகளும், மாணவிகளுக்கென 4 விடுதிகளும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்க தகுதியுள்ளவர்களாவர். மாணவர்கள் வசிப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையம் குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்கு பொருந்தாது.

பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2019-2020ம் கல்வியாண்டிற்கு இந்த விடுதிகளில் சேர தகுதியுடைய பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெற்ற இடத்திலேயே 11.07.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவியர் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் இணைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தலா 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : college hotels ,
× RELATED 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில்...