×

ஆர்டிஇ சட்டத்தில் தேர்ச்சியான மாணவரிடம் கல்வி கட்டணம் கேட்ட பள்ளி மீது புகார்

மதுரை, ஜூன் 11: ஆர்டிஐ சட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவரிடம் திடீரென்று கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகம் கேட்டது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த மாதவன் மகன் ஹரிஷ் (7). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச கட்டாய கல்விச்சட்டத்தில் (ஆர்டிஇ) முறையாக விண்ணப்பித்து, குலுக்கல் முறையில் தேர்வு பெற்றார். இவர் மதுரை அனுப்பானடி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் இச்சட்டத்தின்படி இலவச கல்வியில் படித்து வந்தார். இந்தாண்டு, 2ம் வகுப்புக்கு மாணவர் சென்ற போது ஆர்டிஇ திட்டத்தில் சேர வயதில் ஒரு மாதம் அதிகமாக உள்ளது. இதனால் இத்திட்டத்தில் உன்னை சேர்க்க முடியாது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால், பள்ளி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் டிசியை வாங்கி செல் என பள்ளி நிர்வாகம் மாணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து மாதவன் மகன் ஹரிஷுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்க வந்தார்.

பின்னர் மாதவன், அரசு வழங்கியுள்ள இலவச கட்டாய கல்விச்சட்டத்தில் தனது மகனுக்கு படிப்பை பள்ளி நிர்வாகம் நிறுவனம் தொடர்ந்து வழங்க மறுக்கிறது. தொடர்ந்து அதே திட்டத்தில், படிக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கலெக்டர் (பொ) சாந்தகுமாரிடம் மனுவை கொடுத்தார். இதுதொடர்பாக கலெக்டர், கல்வி அதிகாரியை அழைத்து மாணவருக்கு ஆர்டிஇ திட்டத்தில் தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

Tags : school ,student ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...