×

போச்சம்பள்ளியில் முட்டைக்கோஸ் விலை உயர்வு தக்காளி விலை சரிந்தது

போச்சம்பள்ளி, ஜூன் 11: போச்சம்பள்ளியில் கோஸ் விலை உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை சரிந்துள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் பரவலாக முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ளனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் கோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். போதிய மழையில்லாத காரணத்தால் குறைந்த நீராதாரத்ைத கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் கோஸ் பயிரை காப்பாற்றி வந்தனர். இந்நிலையில், தற்போது கோஸ் அறுவடைக்கு வந்துள்ளது. விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதங்களில் ₹5 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோஸ் தற்போது ₹25 முதல் ₹30 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. விளைச்சல் குறைந்தாலும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேவேளையில் தக்காளி விலை சரிந்துள்ளது. போச்சம்பள்ளி பகுதியில் சுட்டெரித்த வெயிலுக்கு கடந்த வாரங்களில் உற்பத்தி சரிந்ததால் தக்காளி விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. அதிகப்பட்சம் ₹50 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோடை மழை காரணமாக விளைச்சல் சற்று அதிகரித்துள்ளது. இதனால், விலையும் குறைந்துள்ளது. கிலோ ₹25 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Pokhampillai ,
× RELATED போச்சம்பள்ளியில் காய்கறிகள் விலை குறைவு