×

போச்சம்பள்ளியில் காய்கறிகள் விலை குறைவு

போச்சம்பள்ளி, ஜன.30:   கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் பண்டிகையின்போது, தக்காளி, கேரட், முட்டைேகாஸ், பீட்ரூட், சாம்பார் பூசணி, கரும்பு, மஞ்சள் என பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. அப்போது காய்கறிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
இதனால் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பொங்கலுக்கு பின் காய்கறி விலை கணிசமாக குறைந்து  விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 40க்கு விற்பனை செய்யப்பட்ட அவரை ₹8க்கும், ₹25 க்கு விற்ற தக்காளி ₹8க்கும், ₹30க்கு விற்ற கத்திரி ₹12க்கும், ₹30க்கு விற்ற பச்சை மிளகாய் ₹15 க்கும் விற்பனையாகிறது. இதில், கடந்த வாரம் ஒரு கிலோ ₹150க்கு விற்பனையான  முருங்கைக்காய் தற்போது ₹150க்கு விற்பனையாகிறது.
   

Tags : Pokhampillai ,
× RELATED போச்சம்பள்ளியில் முட்டைக்கோஸ் விலை உயர்வு தக்காளி விலை சரிந்தது