×

தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்

கோவில்பட்டி, ஜூன் 11:  தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை  குறைக்க வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த  சிஐடியூ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் சிஐடியூ வட்டார தீப்பெட்டி தொழிலாளர் சங்க 6வது மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மாரியம்மாள் கொடியேற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.  மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி வரவு- செலவு திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி செயல்பாட்டு அறிக்கை வாசித்தார். சிஐடியூ தொழிற்சங்க மாநில  செயலாளர் ரசல், சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் முருகன் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தீப்பெட்டி தொழிலுக்கான 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். தீப்பெட்டி உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் முதலான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : GSD ,
× RELATED உள்நாட்டு இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்