×

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பன்னாட்டு மொழி பயிற்றுவித்தல் வகுப்பு விரைவில் துவக்கம்

தூத்துக்குடி, ஜூன் 7: வஉசி கல்லூரி முதல்வர்  வீரபாகு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரிக்கும், சென்னையில் உள்ள இன்அவோர்ட் என்ற பன்னாட்டு மொழிகளை பயிற்றுவிக்கும் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி  தூத்துக்குடியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பன்னாட்டு மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ஒரு மொழிக்கு 100 மணி நேரம் என்ற அளவில் வாரத்துக்கு 3 நாள்கள்,  ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதம் வகுப்புகள் நடைபெற உள்ளன. ஒரு மொழிக்கு ஒரு வகுப்பு வீதம் பருவ முறையில் ஜூலை முதல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஜப்பானிஸ், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்ச், சைனீஸ் ஆகிய பன்னாட்டு மொழிகளை பேசவும், புரிந்து கொள்ளவும் அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்போருக்கு தேர்வுக்கு பின் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில்  கல்லூரிச் செயலாளர் சொக்கலிங்கம்,  முதல்வர்,  இன்அவோர்ட் நிறுவன இயக்குநர் ஜெநோபியா,  சந்தீப் டாங் மற்றும்  கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TU Thoothukudi VU College ,
× RELATED அனல்மின் நிலைய மாஜி பொறியாளர் வீட்டில் 25 கிலோ வெள்ளி கொள்ளை