×

காட்டேரி டேம்-கொல்லிமலை ஓரநள்ளி சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி, ஜூன் 7: காட்டேரி டேம்-கொல்லிமலை ஓரநள்ளி செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடாவில் இருந்து சேலாஸ் பகுதிக்கு காட்டேரி டேம் வழியாக செல்கிறது. அதேபோல், கொல்லிமலை ஓரநள்ளிக்கும் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக அரசு பஸ்கள் செல்லாத நிலையில், தனியார் வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. குறிப்பாக, கொல்லிமலை ஓரநள்ளி, கோலனி மட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளை இவ்வழித்தடத்தில் விவசாயிகள் நாள் தோறும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், இச்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதில், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள் நடந்துச் செல்ல முடியாத நிலை இருந்தது. இரவு நேரங்களில் இவ்வழியாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் இன இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து தற்போது, அதிகரட்டி பஞ்சாயத்து சார்பில் இச்சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், காட்டேரி வில்லேஜ், கோலனிமட்டம், செல்வீப் நகர் பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.

Tags : Vallery Dam ,road ,Kollimalai Ooranady ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி