×

புதன்சந்தையில் ஓடும் பஸ்சில் தவறி

விழுந்து மெக்கானிக் சாவுசேந்தமங்கலம், ஜூன் 7: நாமக்கல் ஜெட்டிக்குளத் தெருவை சேர்ந்தவர் காதர்பாய் (40). இவர் அங்குள்ள லாரி பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, லாரிக்கு உதிரி பாகங்கள் வாங்க சேலத்துக்கு, தனியார் பஸ்சில் சென்றார். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்சின் பின்புற படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணித்துள்ளார். புதன்சந்தை மேம்பாலத்தில் சென்ற போது, பஸ்சில் இருந்து நிலைதடுமாறிய காதர்பாய், சாலையில் விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bush ,
× RELATED பஸ் மோதி விவசாயி பலி