×

நீடாமங்கலத்திலிருந்து 21 வேகன்களில் 945 டன் நெல் அரவைக்கு அனுப்பப்பட்டது

நீடாமங்கலம், ஜூன் 7: நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 21 வேகன்களில் 945 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோகத்திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது கோடை சாகுபடி செய்துள்ள சன்ன ரக நெல் மற்றும் சம்பா சாகுபடி செய்து சேமித்து வைத்துள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள் அசேசம், ஆதனூர்,தெற்கு நத்தம், இடையர் நத்தம், மூவாநல்லூர், தலையாமங்கலம், நவீன அரிசிஆலை சுந்தரகோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி பகுதியிலிருந்து நேற்று 75 லாரிகளில் 945 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு 21 வேகன்களில் கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு அரவைக்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Neemamangalam ,
× RELATED நீ்டாமங்கலம் திரவுபதியம்மன் கோயிலில் 44வது தீமிதி திருவிழா