×

தண்டராம்பட்டு அரசுப்பள்ளியில்எல்கேஜி வகுப்பில் சேர 77 மாணவர்கள் மேள, தாளத்துடன் அழைப்பு

தண்டராம்பட்டு, ஜூன் 7: தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் புதிதாக பள்ளியில் சேர உள்ள 77 மாணவ, மாணவிகளின் வீட்டுக்கு சென்று மாலை அணிவித்து மேள தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து பயன் பெறுங்கள். தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியிலும் கல்வி சதவீதம் அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட தயாராக உள்ளனர்’ என்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வேடியப்பன், துணை ஆய்வாளர் வேங்கட சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் மணி, உதவி தலைமை ஆசிரியை லதா கலந்து கொண்டனர்.

Tags : Tandaramattu Government School ,
× RELATED வாத்து மேய்க்கும் கூலித்தொழிலாளியை...