×

உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தையொட்டி கல்பட்டு கிராமத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

செய்யூர், ஜூன் 7: ஈஷா அறக்கட்டளை சார்பில், செய்யூர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, செய்யூர் தாலுகா, சித்தாமூர் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில், 40 ஏக்கர் நிலப்பரப்பில், ஈஷா அறக்கட்டளையின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் சுமார் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், தேர்தல் ஆணைய துணை வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். ஈஷா வேளாண் காடுகள் திட்டக் குழுவினர். மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழாவில் கலந்து ெகாண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர்கள் பாலசந்தர், செந்தில்குமார், குமரேசன், ஈஷா அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ராஜவேலு உள்பட விவசாயிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு, அப்பகுதியில் ஆர்வமுடன் பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்ந்து, ஈஷா அறக்கட்டளை சார்பில், வெண்ணாங்குபட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. அதில், மாணவர்களுக்கு மரக்கன்று நடுதல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் சேகர், பசுமை படை ஆசிரியர் கண்ணன், ஈஷா பசுமை பள்ளி ஒருங்கிணைப்பளர் வீரமணி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : sapling ceremony ,Kalpattu village ,World Environmental Day ,
× RELATED மரக்கன்று நடும் விழா