அலங்காநல்லூர் அருகே திடீரென தீ பற்றி எரிந்த கார்

அலங்காநல்லூர், ஜூன் 5: அலங்காநல்லூர் அருகே அய்யணகவுண்டன்பட்டி பகுதியில் சாலையில் வந்த கார் அதிக வெப்பம் காரணமாக திடீரென தீபிடித்து எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவரது மகன் சபரீஸ் ஆகிய இருவரும் காரில் அலங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அய்யணகவுண்டன்பட்டி அருகே வந்தபோது திடீரென காரின் எஞ்சினில் புகை வந்தது. இதை பார்த்த இருவரும் காரைவிட்டு கீழே இறங்கினர். சற்று நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துராம் மேற்பார்வையில் தீயை அணைத்தனர். காரின் எஞ்சின் சூடானதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags : Alankanallur ,
× RELATED ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு