×

கோவில்பட்டியில் மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கோவில்பட்டி, ஜூன் 5: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில்  புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர். கோவில்பட்டி  புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். ஆசிரியர்கள்  வினிக்ஸ் சுமத்ரா, சித்ராமாலினி முன்னிலை வகித்து மிதிவண்டியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விளக்கிக் கூறினர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : awareness cycle rally ,Kovilpatti ,
× RELATED புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி