×

ஆரணி நகரப்பகுதிகளில் பெட்டிக்கடைகளில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மது, போலி சரக்கு விற்பனை கண்டு கொள்ளாத காவல் துறையினர்

ஆரணி, ஜூன் 5: ஆரணி நகரப்பகுதிகளில் பெட்டிக்கடைகளில் அதிகரித்து வரும் அரசு மது, போலி சரக்கு விற்பனை செய்யவதை காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம், மணிகூண்டு அருகே, காமராஜர் சிலை அருகில், புதிய பேருந்து நிலையம், காந்தி சாலை, வடுக்கசாத்து ஆகிய பகுதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் தங்குதடையின்றி அரசு மது, போலி சரக்கு மற்றும் சாராய பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே மினி டாஸ்மாக் கடையாகவே செயல்பட்டு வரும் பெட்டிக்கடையில் காலை 5 மணி முதல் இரவு 2 மணி வரை அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து ஒரு பாட்டில் ₹130 லிருந்து ₹150 வரைக்கும் கூடுதல் விலைக்கு இரவு, பகலாக மது விற்பனை நடைப்பெற்று வருகிறது.

இதனால் ஆரணி முக்கிய விதியான இப்பகுதியில் பெட்டிக்கடைகளில் அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் காலை 8 மணிக்கே குடிமகன்கள் மதுகுடித்து விட்டு போதையில் சாலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பேருந்துகளில் வரும் பயணிகளிடம் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆரணி நகர காவல் நிலையத்தில் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, ஆரணி முக்கிய விதியான மணிகூண்டு, காமராஜர் சிலை, காந்தி சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பெட்டிக்கடையில் இரவு, பகலாக அரசு மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்டிக்கடைகளில் அரச மது மற்றும் போலி சரக்கு பதுக்கி இரவு, பகலாக விற்பனை செய்வது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், மது விற்பனை செய்பவர்கள் பெரியளவில் மாமூல் கொடுத்து அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு பெட்டிக்கடைகளில் பார் வசதியுடன் திறந்த வெளியில் மது விற்பனை படுஜோராக நடைப்பெற்று வருகிறது.

டாஸ்மாக் கடை அதிகாரிகளும் இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலி சரக்கு, அரசு மதுக்களை பெட்டி, பெட்டியாக கொடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் அரசு மதுபாட்டில்கள் முன்கூட்டியே பெட்டிகடைக்காரர்களுக்கு கொடுத்து விற்பனை செய்ய சொல்கிறார்களாம். இதனால் அரசு மதுவுடன் போலி சரக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Ariani Urban Areas Alcohol ,
× RELATED வனத்துறை பராமரித்து வந்த 25...