×

இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் மல்லிகை அம்மன் கோயில் திருவிழா

முத்துப்பேட்டை, ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு மல்லிகை அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு சம்பஸ்திரா அபிஷேக திருவிழா நடைப்பெற்றது. முன்னதாக ராஜகணபதி, மல்லிகை அம்மன், இருளன், காட்டேரி, பெரியாச்சி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஸ்வநாத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகங்கள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மாவிளக்கு போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட பெண் பக்தர்களுக்கு தாலி கயிறு, கொழுக்கட்டை போன்ற பிரசாதங்களும் வழங்கப்பட்டன. மேலும் கஞ்சி வார்த்தல், அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Mallikai Amman Temple Festival ,
× RELATED கடந்த 3 நாட்களில் 3.16 லட்சம் ரேஷன்...