×

தஞ்சை மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

தஞ்சை, ஜூன் 4: தஞ்சை மாவட்டத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சையில் லெட்சுமி சீவல் பேருந்து நிலையம், பாலாஜி நகர், மங்களபுரம்,  நடராஜபுரம் தெற்கு உட்பட 5 இடங்களில் திமுக மாநில விவசாய அணி செயலாளர்  ஜித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்  மகாதேவன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து தஞ்சை கணபதி நகரில் உள்ள  கில்ட் ஆப் சர்வீஸ் ஆதரவற்றோர் மாணவிகளுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மதிய  உணவு வழங்கப்பட்டது முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், மாவட்ட மருத்துவரணி  அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி  பங்கேற்றனர்.

கும்பகோணம்: கும்பகோணம் நகர சார்பில் உச்சிபிள்ளையார் கோயில் அருகில் கருணாநிதி படத்திற்கு நகர செயலாளர் தமிழழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கும்பகோணம் கோர்ட் வளாகத்தில் திமுக வழக்கறிஞரணி சார்பில் கருணாநிதி படத்துக்கு திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் விஜயகுமார் தலைமையிலும், பம்பப்படையூரில் கருணாநிதி படத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
திருவிடைமருதூர் கடைத்தெருவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமையிலும், திருப்பனந்தாள் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் அண்ணாநம்பி தலைமையிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி படத்திற்கு தொமுச பேரவை பொது செயலாளர் பாண்டியன் மாலை அணிவித்தார். தருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லக்கண்ணு தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தார். நகர செயலாளர் ஜெயராமன், நகர முன்னாள் செயலாளர் சிவாகண்ணன் பங்கேற்றனர்.
பாபநாசம்: தேவராயன்பேட்டையில் கருணாநிதி படத்துக்கு  முன்னாள் ஊராட்சி தலைவர் அம்பிகா சுவாமிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம் பங்கேற்றனர். இதேபோல்  உத்தாணியில் கருணாநிதி படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Karunanidhi ,birthday celebration ,district ,Tanjore ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...