×

ஆத்தூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

சேலம், ஜூன் 4: ஆத்தூர் நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைய சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோம் செய்யப்படுகிறது. ஆத்தூர் நகராட்சியில், 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது காவிரி குடிநீர் விநியோகம் தட்டுப்பாட்டினை சமாளிக்க நகராட்சி மூலம், லாரிகளில் குடிநீர் கொண்டு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படும் காவிரி குடிநீர் சில நேரங்களில், போதுமானதாக இல்லாததால் கடும் தட்டுபாடு ஏற்படுகிறது. மேலும் வார்டு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் வறண்டு உள்ளதால் தண்ணீரின்றி தவிக்க வேண்டியுள்ளது. இதனையடுத்து தண்ணீர் வேண்டிய போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனை போக்கிடும் வகையில் தற்போது நகராட்சியின் மூலம், லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. என்றனர்.

Tags : municipality area ,Attur ,
× RELATED வீடுகளுக்கு வழங்கும் குடிநீர்...